அலி சப்ரி MP இன் வாகனம் மோதி ஒருவர் பலி

நேற்று (04.05) ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வாகனம் அதி வேகமாக சென்று மோதியதில் பாதசாரி ஒருவர் பலியாகினார்.புத்தளம் பாலாவி – கற்பிட்டி வீதியில் நுரைச்சோலை பொலிஸ் பிரிவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

46 வயதான சிமியோன் பெனடிக்ட் டிக்சன் என்ற நபர் வீதியினை கடக்க முற்பட்ட வேளையில் விபத்து நடைபெற்றதாக தெரிவித்த பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வாகனத்தில் இருந்துள்ளதனை உறுதி செய்துள்ளனர்.

வாகன ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ள அதேவேளை வாகனம் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

அலி சப்ரி MP இன் வாகனம் மோதி ஒருவர் பலி

Social Share

Leave a Reply