பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏமாற்றி, பணத்தினையும், நேரத்தினையும் வீணடித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.
“ரஞ்சித் சியம்பலபிடிய, தான் ராஜினாமா செய்த அதே பதவிக்கு மீள போட்டியிட்டு பலமணிநேர பாராளுமன்ற நேரத்தை செலவிட்டு, பொதுநிதியை வீணாக்கியுள்ளார்” என தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு “மக்கள் எதிரணியை சபைக்குள்ளும், மக்களை சபைக்கு வெளியேயும் ஏமாற்ற முயன்றார்” என தெரிவித்துள்ள மனோ கணேசன் “ஒரு ராஜபக்ச செப்படி வித்தை! ஐயோ #ஸ்ரீலங்கா!” என மேலும் பதிவிட்டுள்ளார்.