ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களங்களது சேவைகள் நாளை(06.05) நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தின ஹர்த்தால் காரணமாக ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினது சேவைகள் நடைபெறாதென அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த சேவைக்கான நேரப்பதிவினை பெற்றவர்கள் அலுவலக தினங்களில் அழைப்பெடுத்து அவர்களுக்கான நேரத்தினை மீள பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.