1986 மே 6ம் திகதி சகோதர இயக்க மோதலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவருடன் உயிர் நீத்த 300க்கும் மேற்பட்ட போராளிகள் பொதுமக்களுக்கு இன்று கோண்டாவில் அன்னங்கை ஒழுங்கையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றதுள்ளது.
யாழ் மாவட்ட ரெலோ கட்சியினரால் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
