நேற்று இரவு பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட “ஹொரு ஹோ கம”(திருடர் விரட்டு நகர்) பகுதியில் இன்று காலை முதல் உள்ளாடைகளை தொங்கவிட்டு போராட்டம் நடைபெறுகிறது.
“இதுமட்டுமே மிஞ்சியுள்ளது” என்ற கோஷங்களோடும், பதாதைகளோடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆண், பெண்களது உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.
நேற்று இந்த திருடர் விரட்டு நகர் பகுதி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்டிருந்தது.

