அம்பாறை பாலமுனை பகுதியில் பொது மக்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் பொதுமகன் ஒருவரும், பாலமுனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அடங்கலாக 11 பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி சென்ற நபர் ஒருவரை சோதனை சாவடியில் பொலிஸார் தடுத்து நிறுத்திய போது நிறுத்தாமல் சென்ற நபரை மடக்கி பிடித்த பொலிஸார் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் கோபமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் சோதனை சாவடி இருந்த இடத்தில் ஒன்று சேர்ந்து பொலிஸாரோடு வாக்குவததில் ஈடுபட்டு அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. அதன்போது அங்கிருந்த மக்கள் பொலிஸாரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
