ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய கூட்டம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய கூட்டம் ஒன்று சற்று நேரத்தில் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமென நம்பப்படுகிறது.

ஐக்கிய மக்கள் கூட்டணி நிபந்தனைகளுடன் இடைக்கால அரசாங்கத்துக்கு தயாரென அறிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என நம்பலாம்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய கூட்டம்

Social Share

Leave a Reply