ஐ .பி .எல் கிரிக்கெட் தொடரில்,இன்று ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சூழற்சியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 92 ஓட்டங்களை பெற்றது. இதில் தேவ்தட் படிக்கல் 22(20) ஓட்டங்களையும், ஸ்ரீகர் பரத் 16(19) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அன்றே ரசல் 3 (3 – 9/3) விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி 3 (4 – 13/3) விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 94 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக சுப்மன் கில் 48(34) ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41(27) ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 போட்டிகளில் 6 புள்ளிகளை பெற்று ஐந்தாமிடத்தை பெற்றுள்ளது. தோல்வியடைந்த ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தில் தொடர்கிறது.
நாளைய தினம் (21.09.2021) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
