கனடாவில் தற்போது 44வது பொதுத் தேர்தல் இடம் பெற்றுவரும் நிலையில் ஆளும் கட்சியான லிபரல் மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கனேடிய செய்திப்பிரிவுகள் தெரிவிக்கின்றன.
இப் பொதுத் தேர்தலில் இலங்கையின் முன்னால் நீதிபதி மற்றும் சட்டத்தரணியுமான தர்மசேன யகண்டவெல அபோட்ஸ் தொகுதியில் ஜாக்மீத் சிங் தலைமையிலான என்.டீ.பி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு கனடாவில் குடியேறிய இவர் 2018ம் ஆண்டு தொடக்கம் கனடாவில் தனிநபர்களுக்கான ஆதரவை வழங்கும் வை.எல்.டி எனப்படும் குடிவரவுச் சட்ட நிறுவனமொன்றின் நிர்வாகப் பங்காளராக இருந்துள்ளார்.
இன்றைய தினம் கனடாவின் உள்ளுர் நேரம் பி.ப 7.00 மணி தொடக்கம் பி.ப 9.30 மணிவரை அந்தந்த மாநில நேரங்களுக்கமைய வாக்களிக்கும் நேரம் முடிவுறுத்தப்படவுள்ளது.
பலர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத் தேர்தல் பெறுபேறுகளுக்கான வாக்கெண்ணும் பணியானது தேர்தல் முடிவடைந்த பின்னரான 5 நாட்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

