முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வீட்டில் தனியதாக சுடரேற்றி இன்றைய நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இவரது இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் அவர் சமூக வலைத்தளத்தில் பதவிட்டுள்ள விடயம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
“போர் என்பது ஒரு நாட்டிற்கும் மனித குலத்திற்கு தோல்வியே தவிர வெற்றி அல்ல. முப்பது வருட இனப்படுகொலைப் போரினால் நாம் இழந்தவை ஏராளம். வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தாய்மார்கள் குழந்தைகளை இழந்துள்ளனர். பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர். நாங்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிரிந்தோம்.
அந்தப் போரினால் நானும் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
போரின் முடிவைக் கொண்டாடும் இந்த வேளையில், நாம், வெறுப்புக்குப் பதிலாக நேசிப்போம். பழிவாங்குவதற்கு பதிலாக, மன்னிப்போம். பிரிந்து கிடப்பதை விடுத்து ஒருவரையொருவர் ஆறுதல் படுத்துவோம்.
நம் இதயங்களில் சாத்தானுக்கு மாற்றாக கடவுளை எழுப்புவோம். இன்றைய நாளை உறுதியும் அமைதியும் கொண்ட நாளாக ஆக்குவோம். உலகை நேசித்து சகோதரத்துவத்தில் நிலைத்து நிற்போம். இருள் சூழ்ந்த நிலத்தில் சகவாழ்வின் தீபங்களை ஏற்றி ஒளியேற்றுவோம்.”என பதிவிட்டுள்ளார்.
