ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகளில் கடவுச்சீட்டு எடுப்பதற்கு முற்பதிவு எடுக்காமல் வரவேண்டாமென குவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மிக அதிகளவிலான மக்கள் கடவுச் சீட்டு எடுப்பதற்காக வருகை தருவதனால் அனைவருக்கும் சேவைகளை வழங்க முடியாது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணிவரை 070-7101-060 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது http://www.immigration.gov.lk என்ற இணையத்தினூடாக முற்பதிவுகளை மேற்கொண்டு, வழங்கப்படும் தினங்களில் வருகை தருமாறும் பாணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். முற்பதிவு செய்வது காட்டாயமென மேலும் அவர் கூறியுள்ளார்.
முற்பதிவின்றி செல்பவர்களுக்கு சிரமங்கள் ஏற்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
