லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் எதிர்வரும் 09 ஆம் திகதி இந்தியா மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வரும் அதேவேளை, ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்ற பேச்சுக்கள் அண்மைக்காலமாக அடிபட்டு வரும் நிலையில், தற்போது திருமண திகதி வெளியாகியுள்ளது.
