சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் நேற்று பாராளுமன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் “பிரதமர் தலைமையில் தற்போது உருவாகியிருக்கும் அரசு இலங்கையின் பொருளாதர, மற்றும் அரசியல் சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணும்” என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவதன் மூலம் இலங்கை மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும், அதுவே மக்களின் அவசர தேவையெனவும் ஜூலி சங் சபாநாயகருக்கு கூறியுள்ள அதேவேளை இலங்கை – அமெரிக்க பாராளுமன்ற நட்பு அமைப்பின் மூலம் இரு நாடுகளுக்குமான உறவு மேலும் இறுக்கமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளுக்கு சபாநாயகர் தனது நன்றிகளை அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்துள்ளார்.
