காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு

பாணந்துறை, அத்துளுகமவில் நேற்று காணமல் போன சிறுமி, இன்று அவரது வீட்டுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை 10 மணியளவில், வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு உணவு பொருட்களை வாங்குவதற்காக சென்ற 09 வயதான மொஹமட் அக்ரம் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே இவ்வாறு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவரது தகப்பன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். நான்கு அணிகளாக பொலிஸார் சிறுமியை தேடிய நிலையில் இன்று பிற்பகல் அவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடைக்கு சென்ற சிறுமி, கடையை விட்டு வெளியேறுவது கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. வான் ஒன்றில் வந்தவர்கள் சிறுமியை கடத்தி சென்றதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் நேற்று முதல் பகிரப்பட்டு வந்தன.

பொலிஸார் சிறுமிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு

Social Share

Leave a Reply