இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் பொருளாதார உதவிகளை மேலும் அதிகரிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனுக்கும், இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொடவுக்கும் இடையில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்தியா ஏற்கனவே 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான கடன்களை இலங்கைக்கு வேறுபட்ட வடிவங்களில் வழங்கியுள்ள நிலையில் மேலும் நாட்டை பாதுகாக்க நிதி தேவைப்படுவதனால் அதனை இந்தியாவிடமிருந்து பெறும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற் திட்டங்கள் ஆரம்பிக்கும் வரை இலங்கை, இந்தியா நிதி இணைப்பு பாலம் ஒன்றை உருவாக்குமாறு மிலிந்த மொறகொட, இந்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரு நாடுகளது உயர் மட்ட அதிகாரிகள் இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்நது கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படுமென நம்பப்படுகிறது.
