எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையான அரிசி இருப்பிலுள்ளதாக விவசாயதுறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் அரசி இறக்குமதி செய்யப்படவேண்டியது கட்டாயமென அவர் தெரிவித்துள்ளார்.
24 இலட்சம் மெற்றிக் தொன் இலங்கையின் ஒரு வருடத்துக்கான தேவையாக காணப்படுவதாகவும், மேலும் 7 இலட்சம் மெட்ரிக் தொன் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
