இரண்டு கடவுச்சீட்டுகளை பெற முயற்சித்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி, சஷி வீரவன்ச இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேல்முறையீட்டு மனுவினை அவர் தாக்கல் செய்யவுள்ளமையினால் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கும் வரை 50,000 ரூபா ரொக்க பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சாரீர பிணையிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி திருமதி வீரவன்சவுக்கு இரண்டு ஆண்டுகால கடூழிய சிறை தண்டனையை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொடர்புடைய செய்தி
