இலங்கைக்கு உடனடியாக உர விநியோகம் – இந்திய பிரதமர்

இலங்கைகான இந்திய கடனுதவி திட்டத்தினூடாக உடனடியாக இரசாயன உர பொருட்களை அனுப்பி வைப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறு போக விவசாயத்துக்கு பாவிக்க கூடிய வகையில் இந்த உரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இந்த உரம் வருகை தந்தால் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்கும் என்பதுடன் உணவு உற்பத்தி ஓரளவேனும் பெருகும் நிலை ஏற்படும். அவ்வாறு உற்பத்தி பெருகினால் உணவு தட்டுப்பாடு குறைவடையும் நிலை ஏற்படும். குறிப்பாக அரிசி தட்டுப்பாடு குறைவடையுமென நம்பப்படுகிறது.

விவசாய துறை எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் போதே இந்திய பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உடனடியாக உர விநியோகம் - இந்திய பிரதமர்

Social Share

Leave a Reply