தமிழக நிவாரண பங்கீட்டு குற்றசாட்டை ஜீவன் மறுத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளது என்றும் இவ்விடயத்தில் தான் தலையிட்டதாக போலியான குற்றச்சாட்டை கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தன்மீது சுமத்தியுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றசாட்டு முழுமையான தவறான குற்றச்சாட்டு எனவும் அதனை தான் மறுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் உதவி திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருத்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதலில் அரசியல் தலையீடு இடம்பெறுவதாகவும், தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் ஶ்ரீலலங்கா கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன கூறியுள்ளதாக ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளார்.

தமிழக அரசின் உதவி இது. தோட்ட தொழிலார்களுக்கு மட்டுமல்ல இந்த உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதனை அதிகாரிகளுக்கு கூறியுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களோ, வேறு எந்த அரசியல் வாதிகளோ, நானோ இந்த பயனாளிகள் தெரிவில் தலையிட மாட்டோம் என அதிகாரிகளிடம் கூறியியிருந்தேன் எனவும் தெரிவித்துள்ள ஜீவன்,

உரிய அதிகாரிகளுக்கு பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள மக்களுக்கும் வறியவர்கள் யார் என்பது தெரியும். பங்கீட்டு பணியை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள், மேலும் அரசியல்வாதிகள் தலையிடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். .

5000 ரூபா மற்றும் 1000 ரூபா நிவாரணப் பணியின் போது குறைபாடுகள் இடம்பெற்றன. நிறைய பேருக்கு அந்த கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை. மீண்டும் அந்த தவறு இடம்பெறக்கூடாது, அனைவருக்கும் உரிய வகையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தோம் எனவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் கிராம சேவையாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ள அதேவேளை குற்றச்சாட்டை அவர்கள் நிரூபிக்காத பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக நிவாரண பங்கீட்டு குற்றசாட்டை ஜீவன் மறுத்தார்.

Social Share

Leave a Reply