நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் கிரிக்கெட் ஆரம்பம்.

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் இலங்கையின் மிக நெருக்கடியான சூழிநிலையில் இன்று(07.06) கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளது. மூன்று 20-20 போட்டிகள், ஐந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன.

முதலாவது 20-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளும் தங்களது பலமான அணிகளை களமிறக்கவுள்ளன. இரு அணிகள் மட்டும் மோதிய தொடர்கள் ஏற்கனவே இரு அணிகளுக்குமிடையில் இரண்டு தடவைகள் தலா இரண்டு போட்டிகளோடு நடைபெற்றுள்ளன. இரு அணிகளும் தலா ஒவ்வொரு தொடர்களை இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளன. 2-2 என்ற போட்டி முடிவினை கொண்டுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றுக் கொள்ளும் அணி முன்னிலை பெறவுள்ளது.

இலங்கை அணி – 1 தனுஷ்க குணதிலக்க, 2 பதும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மென்டிஸ் (வி.கா), 5 பானுக ராஜபக்ஷ, 6 தஸூன் ஷானக (தலைவர்), 7 வனிந்து ஹசரங்க, 8 சமிக்க கருணாரட்ன, 9 நுவன் துஷார, 10 துஷ்மந்த சமீர, 11 மகேஷ் தீக்க்ஷன

அவுஸ்திரேலியா உத்தேச அணி – 1 ஆரோன் பின்ச் (தலைவர்), 2 டேவிட் வோர்னர், 3 மிட்செல் மார்ஷ், 4 கிளென் மக்ஸ்வெல், 5 ஸ்டீவன் ஸ்மித், 6 மார்கஸ் ஸ்டோய்னிஸ், 7 மத்யூ வேட் (வி .கா), 8 எஷ்டன் எகர், 9 மிட்செல் ஸ்டார்க், 10 கேன் ரிச்சர்ட்சன், 11 ஜோஷ் ஹேசல்வுட்

சோர்ந்து போய், விரக்தியில், மனவுளைச்சலில் உள்ள இலங்கையருக்கு இந்த கிரிக்கட் போட்டி மனமாற்றத்தை வழங்கும் என நம்பலாம். அத்தோடு இலங்கை அணி வெற்றி பெற்றால் இலங்கை ரசிகர்கள் மிக பெரியளவில் சந்தோசமடைவார்கள் என்பது நிதர்சனம்.

கிரிக்கெட் இலங்கையருக்கு முக்கியமான விடயம். அதனால்தான் முதலிரு போட்டிகளுக்கும் டிக்கெட்கள் தீர்ந்துள்ளன. மாற்றம் ஒன்றை, பொழுபோக்கை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள். சோர்ந்து போயுள்ளவர்களுக்கு இலங்கை வீரர்கள் உற்சாகமூட்ட வேண்டும்.

Social Share

Leave a Reply