இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் இலங்கை அணி அபார மீள் வருகை ஒன்றனை வெளிக்காட்டியது. சிறந்த போட்டி தன்மையினை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு சிறந்த போட்டி ஒன்றினை இலங்கை வழங்கியது.
இருந்தாலும் துடுப்பாட்டத்தில் பெற்ற ஓட்ட எண்ணிக்கை போதாமையினால் தோல்வியினை சந்திக்க நேரிட்டது. அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 என அவுஸ்திரேலிய கைப்பற்றியுள்ளது.
இன்றைய போட்டியில் குறைந்த ஓட்ட எண்ணிக்கையினை இலங்கை அணி பெற்ற போதும், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டு அவுஸ்திரேலியா அணியின் விக்கெட்களை தகர்த்து போட்டியினை விறு விறுப்பாக மாற்றினரார்கள். வனிது ஹசரங்க மிக அபாரமாக பந்துவீசி போட்டியின் போக்கினை மாற்றினார்.
அவுஸ்திரேலிய அணி அதிரடியான ஆரம்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் முன் வரிசை விக்கெட்கள் வீழ்த்தப்பட அவுஸ்திரேலியா அணி தடுமாறி அதிரடி துடுப்பாட்டத்தை நிறுத்தி நிதானத்தை கடைபிடிக்க ஆரம்பித்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் இன்றும் மோசமாகவே அமைந்தது. கடந்த போட்டியில் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தி கொடுத்த இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். மத்திய வரிசையின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்கள் கிடைத்த போதும் நேற்றைய போட்டியிலும் பார்க்க குறைவாகவே இலங்கை அணி ஓட்டங்களை பெற்றது.
ஸ்கோர்
துடுப்பாளர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 6 | 4 |
ஆரோன் பின்ச் | பிடி,தனுஷ்க | வனிது ஹசரங்க | 24 | 12 | 4 | 0 |
டேவிட் வோர்னர் | Run Out | 21 | 10 | 3 | 1 | |
மிட்செல் மார்ஷ் | L.B.W | வனிது ஹசரங்க | 11 | 07 | 2 | 0 |
ஸ்டீவன் ஸ்மித் | L.B.W | நுவான் துஷார | 05 | 04 | 1 | 0 |
கிளென் மக்ஸ்வெல் | பிடி,தனுஷ்க | வனிது ஹசரங்க | 19 | 19 | 0 | 0 |
மார்கஸ் ஸ்டோய்னிஸ் | பிடி, அசலங்க | துஷ்மந்த சமீர | 09 | 07 | 0 | 1 |
மத்யூ வேட் | 26 | 26 | 2 | 0 | ||
அஸ்டன் ஏகர் | Bowled | வனிது ஹசரங்க | ||||
ஜய் ரிச்சட்சன் | 09 | 20 | 0 | 0 | ||
உதிரிகள் | 03 | |||||
ஓவர் – 17.5 | விக்கெட் – 07 | மொத்தம் | 126 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓட்டம் | விக்கெட் |
மகேஷ் தீக்க்ஷன | 04 | 00 | 29 | 00 |
துஷ்மந்த சமீர | 04 | 00 | 31 | 01 |
வனித ஹசரங்க | 04 | 00 | 33 | 04 |
நுவான் துஷார | 02 | 00 | 18 | 01 |
சரித் அசலங்க | 03 | 00 | 07 | 00 |
தனுஷ்க குணதிலக்க | 0.5 | 00 | 08 | 00 |
துடுப்பாளர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 6 | 4 |
பதும் நிஸ்ஸங்க | பிடி, மார்ஷ் | ஜய் ரிச்சட்சன் | 03 | 06 | 0 | 0 |
தனுஷ்க குணதிலக்க | பிடி, மார்ஷ் | கிளென் மக்ஸ்வெல் | 04 | 04 | 0 | 1 |
சரித் அசலங்க | பிடி, பின்ச் | கிளென் மக்ஸ்வெல் | 39 | 33 | 2 | 2 |
குசல் மென்டிஸ் | Hit Wicket | ஜய் ரிச்சட்சன் | 36 | 36 | 2 | 1 |
பானுக ராஜபக்ஷ | பிடி, ஹெசல்வூட் | கேன் ரிச்சர்ட்சன் | 13 | 11 | 1 | 0 |
தஸூன் ஷானக | பிடி, பின்ச் | கேன் ரிச்சர்ட்சன் | 14 | 17 | 2 | 0 |
வனிந்து ஹசரங்க | பிடி, வோர்னர் | ஜய் ரிச்சட்சன் | 12 | 08 | 2 | 0 |
சமிக்க கருணாரட்ன | கேன் ரிச்சர்ட்சன் | 00 | 02 | 0 | 0 | |
துஷ்மந்த சமீர | பிடி,எஷ்டன் எகர் | கேன் ரிச்சர்ட்சன் | 00 | 01 | 0 | 0 |
மகேஷ் தீக்க்ஷன | ||||||
நுவன் துஷார | 01 | 01 | 0 | 0 | ||
உதிரிகள் | 03 | |||||
ஓவர் – 20 | விக்கெட் – 09 | மொத்தம் | 124 |
பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓட்டம் | விக்கெட் |
கிளென் மக்ஸ்வெல் | 03 | 00 | 18 | 02 |
ஜோஷ் ஹெசல்வூட் | 04 | 01 | 16 | 00 |
ஜய் ரிச்சட்சன் | 04 | 00 | 26 | 03 |
கேன் ரிச்சர்ட்சன் | 04 | 00 | 30 | 04 |
எஷ்டன் எகர் | 04 | 00 | 27 | 00 |
மிட்செல் மார்ஷ் | 01 | 00 | 07 | 00 |
——-
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த போட்டியில் சிறந்த ஆரம்பத்தை ஏற்படுத்தி கொடுத்த இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
மத்திய வரிசையின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் ஓட்டங்கள் கிடைத்த போதும் அவுஸ்திரேலியா அணியினை கட்டுப்படுத்தும் அளவுக்கு ஓட்டங்களை பெறமுடியவில்லை. நேற்றைய போட்டியிலும் பார்க்க குறைவாகவே இலங்கை அணி ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் தங்களது விக்கெட்களை பாதுகாக்க விளையாடியது போலவே தென்பட்டது.
இறுக்கமான அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு இன்றும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியுள்ளது. அதிரடியாக இலங்கை துடுப்பாட்ட வீரர்களினால் துடுப்பாட முடியவில்லை. இதன் காரணமாக பெரிய ஓட்ட எண்ணிக்கை ஒன்றினை பெறமுடியவில்லை.
இந்த ஓட்ட எண்ணிக்கை அவுஸ்திரேலயா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.
—————-
நாணய சுழற்சி
இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20-20 போட்டி ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. இலங்கை அணி மாற்றங்களின்றி அதே அணியுடன் விளையாடும் அதேவேளை, அவுஸ்திரேலியா அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் நீக்கப்பட்டு ஜய் ரிச்சட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டராக்கிற்கு நேற்றைய போட்டியில் கையில் காயம் ஏற்பட்டிருந்தது.
நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
இலங்கை அணி – 1 தனுஷ்க குணதிலக்க, 2 பதும் நிஸ்ஸங்க, 3 சரித் அசலங்க, 4 குசல் மென்டிஸ் (வி.கா), 5 பானுக ராஜபக்ஷ, 6 தஸூன் ஷானக (தலைவர்), 7 வனிந்து ஹசரங்க, 8 சமிக்க கருணாரட்ன, 9 நுவன் துஷார, 10 துஷ்மந்த சமீர, 11 மகேஷ் தீக்க்ஷன
அவுஸ்திரேலியா உத்தேச அணி – 1 ஆரோன் பின்ச் (தலைவர்), 2 டேவிட் வோர்னர், 3 மிட்செல் மார்ஷ், 4 கிளென் மக்ஸ்வெல், 5 ஸ்டீவன் ஸ்மித், 6 மார்கஸ் ஸ்டோய்னிஸ், 7 மத்யூ வேட் (வி .கா), 8 எஷ்டன் எகர், 9 ஜய் ரிச்சட்சன், 10 கேன் ரிச்சர்ட்சன், 11 ஜோஷ் ஹசல்வுட்