முன்னாள் நிதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்யவுள்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகும் காரணமும், உத்தியோக பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பசில் ராஜபக்ஷ கடந்த வருடம் தேசிய பட்டியல் நியமனத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சர்களது பதவிகள் மாற்றம் செய்யப்பட்ட வேளையில் இவரின் பதவியும் மாற்றப்பட்டது. இவர் நிதியமைச்சராக இருந்த போது சமர்ப்பித்த 2022 ஆம் ஆண்டு பாதீட்டில் உள்ளடக்கப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டு, புதிய இடைக்கால பாதீடான குறை நிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.