IND v SA 20-20 இந்தியாவின் சாதனைக்கு முற்றுப் புள்ளி.

இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி அதிரடியாக துடுப்பாடி 07 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. டேவிட் மில்லரின் அதிரடி துடுப்பாட்டம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியினை வழங்கியது.

12 போட்டிகளில் இந்தியா அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த தோல்வியின் மூலம் இந்தியா அணி கூடுதலான வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்ற அணி என்ற சாதனையை முறியடிக்க முடியாமல் போயுள்ளது.

212 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 19. ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

அதிரடியாக அடித்தாடி டேவிட் மில்லர் 31 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள்,4 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 64 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அவரோடு இணைந்து ரஸ்ஸி வன் டேர் டுசென் சிறப்பான இணைப்பாட்டத்தை வழங்கினார். 45 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 75 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் முறியடிக்கப்படாத 131 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

டுவைன் பிரட்டோரியஸ் 13 பந்துகளில் நான்கு ஆறு ஓட்டங்களுடன் 29 ஓட்டங்களை பெற்றார். குயின்டன் டி கொக் 22 (18) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷால் பட்டேல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இஷன் கிஷன் அதிரடி ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். 48 பந்துகளில் 76 ஓட்டங்களை பதினொரு நான்கு ஓட்டங்கள், மூன்று சிக்ஸர்களுடன் பெற்றுக் கொண்டார். ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 36(27) ஓட்டங்களை ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 57 ஓட்டங்களை ருத்துராஜ் ஹெய்க்வூட், கிஷனுடன் பகிர்ந்து கொண்டார். அவர் மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 15 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர், கிஷன் ஆகியோர் 80 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாக அணி தலைவர் ரிஷாப் பான்ட், ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக அடுத்தாடி 46 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பான்ட் இரண்டு ஆறு ஓட்டங்களுடன் 29 ஓட்டங்களையும், 3 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் பாண்ட்யா 12 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ், டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னல்,அன்று நோக்ஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

IND v SA 20-20 இந்தியாவின் சாதனைக்கு முற்றுப் புள்ளி.

——————————

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்தியா அணி மிக அபாரமாக, அதிரடியாக துடுப்பாடி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை குவித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இஷன் கிஷன் அதிரடி ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். 48 பந்துகளில் 76 ஓட்டங்களை பதினொரு நான்கு ஓட்டங்கள், மூன்று சிக்ஸர்களுடன் பெற்றுக் கொண்டார். ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 36(27) ஓட்டங்களை ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 57 ஓட்டங்களை ருத்துராஜ் ஹெய்க்வூட், கிஷனுடன் பகிர்ந்து கொண்டார். அவர் மூன்று சிக்ஸர்கள் அடங்கலாக 15 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர், கிஷன் ஆகியோர் 80 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாக அணி தலைவர் ரிஷாப் பான்ட், ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் அதிரடியாக அடுத்தாடி 46 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பான்ட் இரண்டு ஆறு ஓட்டங்களுடன் 29 ஓட்டங்களையும், 3 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் பாண்ட்யா 12 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ், டுவைன் பிரிட்டோரியஸ், வெய்ன் பார்னல்,அன்று நோக்ஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

IND v SA 20-20 இந்தியாவின் சாதனைக்கு முற்றுப் புள்ளி.

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சி நிறைவடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

லோகேஸ் ராகுல் இந்தியா அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உபாதையடைந்தமையினால் ரிஷாப் பான்ட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா அணியின் முக்கிய வீரர் எய்டன் மார்க் ராம் கொவிட் தொற்று காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அணி விபரம்
இந்தியா
1 ருதுராஜ் கெய்க்வாட், 2 இஷன் கிஷன், 3 ஷ்ரேயாஸ் ஐயர், 4 ரிஷாப் பான்ட்(தலைவர், வி.கா), 5 ஹார்டிக் பாண்ட்யா, 6 தினேஷ் கார்த்திக், 7 ஹர்ஷால் பட்டேல், 8 புவனேஷ்வர் குமார், 9 அவேஷ் கான், 10 அக்ஷர் பட்டேல் 11 யுஸ்வேந்திர சஹால்

தென்னாபிரிக்கா

1 குயின்டன் டி கொக் (வி.கா), 2 ரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 டெம்பா பவுமா, 4 அன்று நோக்ஜா , 5 ரஸ்ஸி வன் டு டுசென் 6 டேவிட் மில்லர், 7 டுவைன் பிரிட்டோரியஸ், 8 ககிசோ றபாடா, 9 வெய்ன் பார்னல், 10 கேஷவ் மஹாராஜ் 11 ரப்ரைஸ் ஷம்சி

IND vs S.A – சாதனையை நோக்கி இந்தியா

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளடங்கிய 20-20 கிரிக்கெட் போட்டி தொடர் இன்று(09.06.2022) ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கி, எதிர்கால வீரர்களுடன் களமிறங்கவுள்ளது. லோகேஷ் ராகுல் உபாதையடைந்துள்ள நிலையில் ரிஷாப் பான்ட் இந்தியா அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். தென்னாபிரிக்க அணி ரெம்பா பவுமாவின் தலைமையில் களமிறங்கவுள்ளது.

தென்னாபிரிக்கா அணி பலமான அணியாக களமிறங்கவுள்ளது. முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர் இந்தியாவுக்கு தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் விளையாடுவது பின்னடைவை தரும். ஆனாலும் IPL இல் விளையாடிய அனுபவம் தென்னாபிரிக்கா அணியின் வீரர்களுக்கு பலத்தை வழங்கும்.

இந்தியா அணி 12 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் இன்று வெற்றி பெற்றால் 13 போட்டிகள் என்ற சாதனையினை முறியடிக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ரொமேனியா அணிகள் 12 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று சாதனை படைத்துள்ளன.

இந்தியாவில் வைத்து இரு பலமான அணிகள் மோதுகின்றமையினால் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்புகளை வழங்கியுள்ளன. இந்த வருட இறுதிப் பகுதியில் உலக 20-20 நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடர்
அணிகள் தங்கள் அணிகளை சீர்செய்து கொள்ளவும் நல்ல வாய்ப்பாக இந்த தொடர் அமையும்.

இந்திய அணியின் முக்கிய வீரர்கள் இல்லாமையினால் IPL தொடரில் பிரகாசித்த வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் போர்மை சர்வதேச போட்டிகளுக்கு மாற்ற இது நல்ல வாய்ப்பாக அமையும்.

தென்னாபிரிக்கா அணி தங்கள் துடுப்பாட்ட வரிசையினை நேர்த்தியாக அமைத்து கொள்ள இது நல்ல வாய்ப்பு. அதேபோல பலமான சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியா அணிக்கு பெரும் சவால் வழங்குவார்கள் என நம்பப்படுகிறது.

இரு அணிகளுக்குமிடையிலான முதற் போட்டி இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையில் இரண்டு தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஒன்றில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. மற்றைய தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 20-20 தொடரில் இந்தியா அணி வெற்றி பெறாத நிலையில் இன்று என்ன நடைபெறும்? தொடர் இந்தியா பக்கமாக செல்லுமா?

IND v SA 20-20 இந்தியாவின் சாதனைக்கு முற்றுப் புள்ளி.

Social Share

Leave a Reply