உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களில் 200 கோடியினை தாண்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கமலின் விக்ரம் திரைப்படம் எதிர்பார்ப்பிலும் மீறிய வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச ரீதியில் வசூலை அள்ளிக்கொட்டி வருகிறது. தமிழ் திரைப்படங்கள் 200 கோடியினை தாண்டுவதே அபூர்வம் என்ற நிலையில், இலகுவாக 200 கோடியினை தாண்டியுள்ள நிலையில் புதிய வசூல் சாதனையை பெற வாய்ப்புகள் உள்ளதாக மேலும் நம்பப்படுகிறது.
கமலின் தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய கமலின் படங்களே இதுவரையில் 200 கோடி வசூலை தாண்டிய திரைப்படங்கள். விஸ்வரூபம் 245 கோடியும், தசாவதாரம் 200 கோடி தொகையையும் வசூல் செய்துள்ளன.
இந்த வெற்றியினை தொடர்ந்து கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இற்கு கார் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.
