எதிர்வரும் 23 ஆம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும், 24 ஆம் திகதி டீசல் கப்பலொன்றும் இலங்கை வருகை தரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். 90 மில்லியன் டொலர்கள் கடனுத்தரவாத கடிதம் பெறப்பட்டுளளதாகவும், மேலும் அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று(16.06) கூறியுள்ளார்.
அடுத்த எரிபொருள் கப்பல்கள் வரும் வரை அல்லது அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வரிசைகளில் காத்திருக்க வேண்டாமெனவும் மக்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.
தனியார் பஸ் உரிமையாளர்களை இலங்கை போக்குவரத்து சங்கத்தின் எரிபொருள் நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும், மற்றைய நிலையங்களுக்கு செல்ல தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை பாடசாலை, ஊழியர் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா பயணிகளது வாகனங்களுக்கான எரிபொருளை இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் கூறியுள்ளார்.
மோட்டர் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இலக்க தகடுகளின் அடிப்படையில், ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களது ஊழியர்களை அலுவலங்களுக்கு அழைக்காது வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
