விசுவமடு எரிபொருள் நிலைய துப்பாக்கி சூடு – முழுமை ரிப்போர்ட்

முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று(18.06) இரவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தபோது ஏற்பட்ட அமைதியின்மை இளைஞர்களுக்கும், இராணுவத்தினருக்கும் மோதலில் நிறைவடைந்தது.

நேற்று (18.06) காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பெற வந்த மன நலம் பாதிக்கப்பட்ட நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள இராணுவ காவலரன் இராணுவத்தினருடன் முரண்பட்டபோது இராணுவத்தினர் அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், இராணுவத்தினர் அவருக்கு சிகிச்சையளித்து விட்டு இராணுவ காவலரனில் தடுத்து வைத்திருந்தனர்.

மாலையில் அங்கு கூடியிருந்த மக்கள் குறித்த நபரை விடுமாறு இராணுவத்தினரை கேட்டிருந்தனர். இருப்பினும் அந்த நபரை இராணுவம் விடுவிக்கவில்லை. இதனால் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சோடா போத்தல்கள் மற்றும் தடிகள் கொண்டு தாக்கினர்! .இருதரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்ததை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

மக்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து. மக்கள் கலைந்து சென்றனர். குறித்த பகுதியில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வீதியில் போத்தல் உடைந்த தூள்கள் பரவி காணப்படுகின்றன. இராணுவம் தடிகள் ,மற்றும் துப்பாக்கிகளோடு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இராணுவ வாகனம் மீதும் கல்வீசப்பட்டிருப்பதை காணமுடிந்தது. மோட்டார் சைக்கிள்கள் சேதமைந்த நிலையிலும், சில வாகனங்கள் சேதமடைந்துமுள்ளன. இராணுவத்தினரின் வாகனத்தின் கண்ணாடி சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பலர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இராணுவத்தினர் சிலர் கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிது. இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர். நடைபெற்ற சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறான நிலையில் சமப்வ இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நடந்த சம்பவத்தை பார்வையிட்டு, அங்கிருந்த மக்களுடனும், இராணுவம் மற்றும் பொலிசாருடனும் கலந்துரையாடினர்.

விசுவமடு எரிபொருள் நிலைய துப்பாக்கி சூடு - முழுமை ரிப்போர்ட்
விசுவமடு எரிபொருள் நிலைய துப்பாக்கி சூடு - முழுமை ரிப்போர்ட்

Social Share

Leave a Reply