எரிபொருள் நிலையங்களில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள், ஆக்ரோஷமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது குறைந்தளவு பலத்தை பாவிக்க பொலிசாருக்கு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று(18.06) நடைபெற்ற பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரிலான் அலஷுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு குறைந்தளவு பலத்தை பாவிக்குமாறும், தேவையேற்படின் இராணுவத்தை பாவிக்குமாறும் அமைச்சர் கூறியுள்ளார். அத்தோடு அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென மேலும் கூறப்பட்டுள்ளது.
