IMF கூட்டத்தை காட்டி மக்களை ஏமாற்றும் அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் நாளை(19.06) ஆரம்பமாகவுள்ளது. கூட்டம் சரியான முறையில் நகர்ந்தால் 27 ஆம் திகதி அலுவலக ரீதியிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் சுயாதீன எதிர்க்கட்சி உறுப்பினரான பாட்லி சம்பிக்க ரணவக்க, இந்த கூட்டத்தை வைத்து அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

“சர்வதேச நாணய நிதிய கூட்டம் ஆரம்பித்து ஒரு வாரத்தில் அலுவலக ரீதியிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம். அவ்வாறு கைச்சாத்திட்டால் கடன்களை மீள் ஒழுங்கமைப்பு செய்து அதனை செலுத்துவதற்காகன நடவடிக்கைகளே இடம்பெறும். உடனடியாக பணம் கிடைக்கது. பணம் கிடைக்க பல மாதங்கள் செல்லும். ஆகவே அரசாங்கம் இவ்வாறான பிழையான வாக்குறுதிகள் மூலம் மக்களை முட்டாள்களாக்க கூடாது” என சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

IMF கூட்டத்தை காட்டி மக்களை ஏமாற்றும் அரசாங்கம்

Social Share

Leave a Reply