நாமல் ராஜபக்ஷ, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்கள் சில பங்குபற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டதனை, இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய கிரிக்கட் பாணியில், விளையாட்டு பாணியில் விமர்ச்சித்துள்ளார்.
“வீரர்கள் சரியாக விளையாடவில்லை என அணியினால் நீக்கப்பட்டால், அவர்கள் வேறு விளையாட்டை நோக்கி செல்ல வேண்டும். அதுதான் நல்ல விளையாட்டு பண்பு. அதை விட்டு அதே அணியின் கூட்டத்துக்கு மீண்டும் வந்து அணியின் புதிய தலைவரை சங்கடத்துக்கு உள்ளாக்க கூடாது” என சனத் ஜெயசூரிய ட்விட்டரில் கூறியுள்ளார்.
