சர்வதேச நாணய நிதிய கூட்டம் இன்று ஆரம்பம்.

இலங்கை மட்டுமல்லாமல் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான கூட்டம் இன்று ஆரம்பிக்கவுள்ளது.

சரவதேச நாணயத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களும் வருகை தந்துள்ளனர். நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்ரம்சிங்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த ஸ்ரீவர்தன ஆகியோர் அடங்கிய குழு இலங்கை சார்பாக கூட்டத்தில் பங்குபற்றவுள்ளது.

இந்த கூட்ட தொடர் நிறைவில் அலுவலக மட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பபடுமென பிரதமர் நீண்ட நாட்களாக நம்பிக்கை வெளியிட்டு வருகிறார். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டாலும் கடன் உடனடியாக கிடைக்காதென பல தரப்புகளும் கூறி வருகின்றன. அதுதான் நடைமுறை.

இவ்வாறான சூழ்நிலையில் கடனை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு ஏமாற்றமாக அமையலாம். ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமானல் அது முக்கியமான ஆரம்ப புள்ளியாக அமையும். அந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டாளல் மட்டுமே பல மாதங்களுக்கு பின்னர் கிடைக்குமென எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். அரசியல்வாதிகள் கடன் உடனடியாக கிடைக்காதென விமர்சனங்களை முன்வைத்தாலும் பொருளாதார மற்றும் வியாபர துறையினர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதனை எதிர்பார்த்துள்ளனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திட்டால், இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயம் நம்பிக்கை கொண்டுள்ளது என்ற செய்தி உலக நாடுகளுக்கு சென்றடையும். இதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கை நோக்கி வரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். பங்கு சந்தையில் பங்கு பரிவர்த்தனை அதிகரிக்கும். இவற்றின் மூலமாக பொருளாதர வளர்ச்சியின் முதற் படி ஆரம்பமாகும் என நம்பப்படுகிறது. அத்தோடு வெளிநாட்டு நிவாரண உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள், சிறியளவிலான கடன்கள், முதலீட்டு கடன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் கூட உருவாகலாம்.

சர்வதேச நாணய நிதிய கூட்டம் இன்று ஆரம்பம்.

Social Share

Leave a Reply