ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. நாட்டின் தற்போதைய எரிபொருள் சிக்கல் நிலை தொடர்பிலும், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் பேசப்படவுள்ளது. அத்தோடு 21 ஆம் திருத்த சட்டம் தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 21 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சரவை கூட்டத்திலும் 21 ஆம் திருத்த சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி - பொதுஜன பெரமுன சந்திப்பு இன்று

Social Share

Leave a Reply