இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்கள் கிடைத்தது

அவுஸ்திரேலியா, 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையின் உணவு மற்றும் சுகாதார அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்த 50 மில்லியன் டொலர்களில் 22 மில்லியன் டொலர்கள் உலக உணவு திட்டத்தினூடாக உடனடியாக வழங்கப்படவுள்ளது. 23 மில்லியன் டொலர்கள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 5 மில்லியன் டொலர்கள் ஏற்கனவே மகளிர் மற்றும் யுவதிகளுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் முகவர்களூடாக வழங்கப்பட்டுள்ளது.

“இலங்கை மோசமான நிலைமையினை எதிர்கொண்டுள்ளது. கடந்த 70 வருடங்களில் உணவு தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என்பன மிக மோசமாக ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா இலங்கையுடன் நீண்ட நட்புறவை கொண்டுள்ளது. அதனால் மட்டும் இந்த உதவிகளை வழங்கவில்லை. இந்த வலயத்தில் இவ்வாறான நிலை மோசமான நிலை காணப்பட்டால், பாரிய பின் விளைவுகள் ஏற்படும் என்பதனையும் கருத்திற் கொண்டே இந்த உதவிகள் வழங்கப்படுவதாக” இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்கள் கிடைத்தது

Social Share

Leave a Reply