திருகோணமலை-ரொட்டவெவ,மிரிஸ்வெவ பகுதியில் இன்று காலை இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமைடந்த 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதுண்ட இரு குழுக்களுக்கும் 3 நாட்களுக்கு முன்னர் கை கலப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு குழுவை சேர்ந்த கடைக்குச் சென்ற மாணவனை தாக்கியதுடன் மிளகாய் தூள் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் மூன்று சிறுவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மற்றைய குழுவில் மூன்று மாணவர்கள் தங்களை தாக்கியதாக 1990 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக இருவர் அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த 05 மாணவர்களில் 03 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 16 வயதுக்கு குறைந்தவர்களே அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
