காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களையே பொலிசார் கைது செய்துள்ளனர்.
அங்கிருந்த போராட்டக்காரர்களை கைது செய்த அதேவேளை ,அங்கிருந்த போராட்டக்காரர்களை பொலிசார் விரட்டியதன் காரணமாக பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
நிதியமைச்சில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் இரண்டு நுழைவாயில்களை தடுத்தவர்களே இவ்வாறு அகற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு மதகுரு, நான்கு பெண்கள் அடங்கலாக 21 நபர்களை பொலிசார் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
