காலிமுகத்திடலில் கைதானவர்கள் பிணையில் விடுதலை

இன்று காலை காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டும், நிதியமைச்சு நுழைவாயிலை மறைத்தும் போராட்டம் நடாத்தியவர்களில் 21 நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பெளத்த மதகுரு ஒருவர், நான்கு பெண்கள் அடங்கலாக 21 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அரச அலுவலகங்களின் வேலைகளுக்கு இடையூறு வழங்கியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், குறித்த அலுவலகங்களுக்கு வருகை தந்த மக்களும் இடையூறுகளை எதிர்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று முன்னிரவு பகுதியில் மீண்டும் காலிமுகத்திடல் வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யார் தடுத்தாலும், பொலிசார் கைது செய்தாலும் போராட்டங்கள் தொடருமென போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் கைதானவர்கள் பிணையில் விடுதலை

Social Share

Leave a Reply