நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபுவின் தகப்பன் கங்கை அமரன் இந்த தகவலை கூறியுள்ளதாக தமிழத்தின் செய்தி தொலைக்காட்சி ஒன்று இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் – கங்கை அமரன் தகவல்” என அந்த ஊடகம் கூறியுள்ளது. இந்த திரைப்படத்துக்குள் ஏதேனும் உள் குத்துக்கள் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படம் ஒன்றில் இருவரும் ஏதும் கெளரவ தோற்றங்களில் தோன்றவுள்ளார்களா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் வெளிவரும் வரை எந்த தகவல்களும் நம்பிக்கைக்குரியவை அல்ல.
