ரணில் – இந்திய விசேட குழு சந்திப்பு தொடர்பில் ரணில் கருத்து

நேற்று(23.06) இலங்கைக்கு வருகை தந்து நாடு திரும்பியுள்ள இந்திய உயர் மட்ட விசேட குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து உரையாடினார்கர்கள். இந்தியா வழங்கிய உதவிகள் மற்றும் கடன்கள், கடனுதவி திட்டம் போன்றவை தொடர்பிலும் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

நேற்றைய கூட்டம் ஆரோக்கியமானதாக அமைந்ததாகவும், இந்தியாவுடன் தொடர்ந்தும் இறுக்கமான, நெருக்கமான பிணைப்புகள் ஏற்படுமென தான் நம்புவதாகவும் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா, இந்திய பொருளாதார உறவுகள் செயலாளர் அஜய் சேத், தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்.

ரணில் - இந்திய விசேட குழு சந்திப்பு தொடர்பில் ரணில் கருத்து

Social Share

Leave a Reply