தமிழக அரசாங்கத்திடமிருந்து இந்திய மத்திய அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதனை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை தரப்பினரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
15,000 மெற்றிக் தொன் எடையுடைய அரிசி, பால்மா, மருத்துவ பொருட்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே வருகை தந்த பொருட்களை சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, வர்த்தகத்துறை அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரன், வி.ராதாகிருஷ்ணன், M.உதயகுமார், அங்கஜன் ராமநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், ஆகியோரிடம் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கையளித்தார்.
வருகை தந்த பொருட்களில் 14,700 மெற்றிக் தொன் அரிசி, 250 மெற்றிக் தொன் பால் மா, 38 மெற்றிக் தொன் மருந்து பொருட்கள் வருகை தந்துள்ளன. இவற்றின் பெறுமதி 3000 கோடி ரூபாயென இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்துளளார்.
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள், இந்திய – இலங்கை உறவை மேம்படுத்துவதற்கு இந்தியா மக்ளினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வருகை தந்துள்ள பொருட்கள் விரைவில் இலங்கை பூராகவுமுள்ள வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே தமிழக மக்கள் வழங்கி வைத்த மனிதாபிமான உதவி பொருட்களான 40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால்மா, மற்றும் மருந்து பொருட்கள் ஏற்கனவே இலங்கை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
