இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுமென்ற அறிவிப்பினை தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே இரயில்வே சேவைகள் ஊழியர்கள் வரவின்மையினால் தடைப்படலாமென்ற எச்சரிக்கையினை இரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நாளை(27.06) புகையிரத சேவைகள் நடைபெறுமென அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னரான சேவைகள் தொடர்பில் அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இலங்கை போக்குவரத்து சங்கத்தின் போக்குவரத்து சேவைகள் தடையின்றி நடைபெறுமென இலங்கை போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் கால வரையறை தொடர்பில் அறிவித்தல்கள் வெளியிடவில்லை.
தனியார் போக்குவரத்து சங்கம் தமது சேவைகள் தொடர்பிலான அறிவிப்பினை வழங்கவில்லை. எரிபொருள் விலையேற்றத்தின் பின்னர் தனியார் போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களை அதிகரிக்காவிட்டால் தாம் நாளை முதல் சேவையிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
