யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து தமிழகத்துக்கான கப்பல் போக்குவரத்தை சேவையினை மேற்கொள்வதற்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு இன்று வழங்கியுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுமதி வழங்கப்பட்டுள்ளதனை உறுதி செய்துள்ளார்.
ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பயணிகள் போக்குவரத்துக்கான அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது.
