முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வழக்கு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இந்த வழக்கின் சந்தேக நபரை 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரானா ஆசிரியரை பொலிசார் வாக்குமூலம் பெறவும் ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளையடுத்து முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதோடு மேலும் இரண்டு புதிய வழக்குகள் கடந்த 30 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
சந்தேக நபர், மாணவி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு 13 வயது பதினோரு மாதங்களை உடைய மாணவி ஒருவர் பாலியல் துஸ்பியோகம் செய்த சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டும் வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
