பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தான் பதவி விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அவரது அமைச்சரவை அமைச்சர்களும், ஆளும் கட்சியான கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் பதவி விலகும் கோரிக்கையினை முன் வைத்திருந்தனர். அனைவரது கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படும் வரை அவர் பதவி வகிப்பார். புதிய அமைச்சரவை அவரே நியமித்துள்ளார். அதுவரையில் பொரிஸ் ஜோன்சன் பிரதமராக தொடரவுள்ளார். எதிர்க்கட்சியினர் பிரதமர் உடனடியாக பதவி விலகவேண்டுமென கோரியுள்ளனர். இல்லாவிட்டால் தாம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து அவரை பதவி நீக்கம் செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அனைவரும் இணைந்து செயற்படும் நேரமிது எனவும், புதிய பிரதமரை தெரிவு செய்ய வாரங்களோ அல்லது மாதங்களோ எடுக்கலாமெனவும் அவரது கட்சியின் உபதலைவர் ஜஸ்டின் ரொமின்சன் தெரிவித்துள்ளார்.
