திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று இன்று(07.07) மாலை மீட்கப்பட்டுள்ளது.
வீடொன்றினுள் துர்நாற்றம் வீசிய நிலையில், பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட போது ஷாப்பிங் பேக் ஒன்றில் போடப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சீனக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
