இலங்கையின் நெருக்கடிகளை இந்தியா மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இந்திய, கேரளாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“இலங்கையின் பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் அயல் நாடாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
தற்போது அங்கே மிக மோசமான நிலை எதுவுமில்லையெனவும், அவர்கள் பிரச்சினைகளை அவர்களே தீர்ப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அயல் நாடாக நாங்கள் எமது உதவிகளை வழங்குவதோடு ஆதரவினையும் வழங்கி வருகிறோம்” என மேலும் கூறியுள்ளார்.
அயல்நாட்டவர்கள் கடினமான நிலைமையில் உள்ள போது இந்தியா உதவி வழங்கும் என ஜெய்ஷ்ங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.