இலங்கைக்கு இந்திய இராணுவம் வருகை தரவுள்ளதாக சமூக வலைத்தளங்ககளில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லையென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
“மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் போராட்டங்கள் மூலம் வெளியேற்றப்பட முடியாது. அது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஜனநாயகத்தை இலங்கையில் நிலைநாட்ட அவர்கள் கோரும் பட்சத்தில் இந்தியா இராணுவத்தை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும்” என இந்திய முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி ட்விட்டரில் பதிவு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
அந்த தகவலை அடிப்படையாக வைத்தே இலங்கை இந்தியா இராணுவம் வருகிறது என்ற தகவல் சமுக வலைத்தளங்கள் மூலமாக பகிரப்படுவதாக நம்பப்படுகிறது.
இவாறான நிலையிலேயே இந்திய உயர் ஸ்தானிகராலாயம் இந்த தகவல் எந்தவித அடிப்படையும் அற்றது என தெளிவுபடுத்தியுள்ளது. அத்தோடு நேற்று இந்திய வெளியுற அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் “இலங்கை தன்னுடைய பிரச்சினைகளை தானே தீர்த்து கொள்கிறது. அயல் நாடாக நாம் அதனை அவதானிக்கிறோம்” என கூறியிருந்தார்.