பதவி விலகளை பிரதமருக்கு அறிவித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தான் ஏற்கனவே அறிவித்தது போன்று எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 09 ஆம் திகதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி இராணுவ தலைமையகத்தில் பாதுக்காப்பாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.

அவர் பதவி விலக வேண்டுமென கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அது சபாநாயகர் மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது. சபாநாயகரின் அறிவித்தலுக்கு தான் 13 ஆம் திகதி பதிவி விலகுவதாக ஜனாதி அறிவித்ததனை தொடர்ந்து, சபாநாயகர் ஊடகங்கள் மூலமாக குறித்த அறிவிப்பை வெளியிடடார்.

இவ்வாறான நிலையிலேயே பதவி விலகல் அறிவிப்பை பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பதவி விலகளை பிரதமருக்கு அறிவித்தார் ஜனாதிபதி

Social Share

Leave a Reply