அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவு

பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளதாகவும், ஆளும் பொதுஜன பெரமுன சார்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிலான் அலஸ் மட்டும் பங்குபற்றியிருந்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நிறைவடைந்த கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலகுவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை அனைவரினாலும் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்துக்குள், ஜனாதிபதியின் பதவி விலகல் நடைபெறாவிட்டால், தான் பதவி விலகுவதாக சபாநாயகர் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கூறியதாக மனோ MP மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள, தாக்குதல் நடாத்த எதிர்க்கட்சி தலைவர் தனது எதிப்பை வெளியிட்டுள்ளார் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

போராட்ட காரர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழையும் முயற்சிகளை மேற்கொண்டால் அதனை தடுக்குமாறு முப்படைகள் மற்றும், பொலிஸாருக்கு கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது.

இந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்குபற்றவில்லை.

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நிறைவு

Social Share

Leave a Reply