இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணிப்பதற்கு தயாராகிவிட்டதாக ரொய்ட்டேர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. மாலைதீவு அரசாங்க தகல்வகளை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மாலைதீவிலிருந்து விமானம் மூலமாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
சிங்கப்பூர் அரச தரப்பு தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என ரொய்ட்டேர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் சென்றதும் பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்படும் என நம்புவதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
