சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு விருப்பமான ஜனாதிபதியினை தெரிவு செய்ய முழுமையான அனுமதியும், பாதுகாப்பும் வழங்கப்படவேண்டுமென பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் இந்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தெரிவின் போது சிலர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றனர். அதற்கு இடமளிக்கமால் பாரளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதி வழங்கவும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.
அமைதியான போராட்ட காரர்களுக்கும், கிளர்ச்சியாளர்ககும் வித்தியாசம் உண்டு. காவல்துறையினரின் துப்பாக்கிகளை எடுத்து சென்றுள்ளனர். இராணுவத்தினரை காயப்படுத்தியுள்ளனர். இவர்களே கிளர்ச்சி காரர்கள். இவர்கள் வரும் வாரும் அமைதியின்மையினை உருவாக்க முயற்சிக்கலாம். அத்தியாவசிய சேவைகளின் விநியோகம் வரும் வாரம் நடைபெறவுள்ளது. இவ்வாறான சூழ்நிலைகளில் குழப்பம் ஏற்படுத்தாமல் தடுக்குமாறும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் பணித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.
19 ஆம் திருத்த சட்டத்தை விரைவில் அமுலுக்கு கொண்டு வர முயற்சிப்பதாக தெரித்துள்ள பதில் ஜனாதிபதி “அதிமேதகு” என்ற பதத்தை நீக்கவும், ஜனாதிபதிக்கான தனி கொடியினை நீக்கி தேசிய கொடியை மட்டுமே அனைவருக்கும் ஒரே கோடியாக நடைமுறைப்படுத்தவும் தற்காலிக ஜனாதிபதியாக தான் நடவடிக்கைள் எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
அனைவரும் இணைந்து ஆட்சியமைக்க சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுவதாக தெரிவித்துள்ள ரணில், தனிப்பட்ட அரசியலை மறந்து அனைவரும் நாட்டுக்காக இணையும் நேரம் எனவும், நாம் அரசியல் செய்ய நாடு மீதமிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவருக்கும் அழைப்பு விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
