ஜனாதிபதி தெரிவு – மொட்டுக்குள் பிளவு?

இலங்கையின் புதிய ஜனாதிபதி தெரிவு 20 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், பராளுமன்ற பெரும்பாண்மை கட்சியான பொதுஜன பெரமுனவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக நம்ப முடிகிறது.

ஏற்கவனே பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகள் பிரிந்து போயுள்ளன.
இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கே பொதுஜன பெரமுன ஆதரவு என அதன் செயலாளர் சாகல காரியவசம் அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்புக்கு, கட்சியின் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் G.L பீரிஸ் எந்த அடிப்படையில் இந்த அறிவிப்பை அவர் விடுத்தார் என கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார்.

யாருடைய அனுமதியோடு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்?, யாரெல்லாம் இணைந்து இந்த முடிவினை, எப்போது, எந்த கூட்டத்தில் எடுத்தது?, கூட்டம் நடாத்தப்பட்டமைக்கான அறிக்கை, கூட்டத்துக்கு அழைத்தமைக்கான ஆவணங்கள், கூட்டத்துக்கான நபர்களை அழைத்த அடிப்படை போன்ற விளக்கங்களை கோரியுள்ள அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாப்பின் எதன் பிரகாரம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது போன்ற விடயங்களையும் உடனடியாக தெரிவிக்குமாறு செயலாளர் சாகல காரியவசத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த பின்னரே அந்த கட்சியின் செயலாளர் இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்தார். இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இதுவரை அறிவிக்காத நிலையிலேயே இந்த அறிவிப்பினை சாகல காரியவசம் மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் பீரிஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதம் மூலம் அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தெரிவு - மொட்டுக்குள் பிளவு?

Social Share

Leave a Reply